CMPC
STATEMENTS / அறிக்கைகள்

பத்திரிகையாளர்களையும் பத்திரிகை ஆசிரியர்களையும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் பாஜக தலைவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்ப் பத்திரிகை ஆசியர்கள் சங்கம் (Editors Guild) தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

பத்திரிகையாளர் சந்திப்புகளின்போதும் அவர்கள் எழுப்பும் கேள்விக்கு பதில்அளிக்க முடியாமல் திணறும் அரசியல் கட்சித் தலைவர்கள், அந்த கேள்வியிலிருந்து தப்பிக்கும் வகையில், அந்தப் பத்திரிகையாளர் சார்ந்த பத்திரிகை நிறுவனம் குறித்து விமர்சனம் செய்யும் ஒரு தவறான போக்கை ஒரு வழிமுறையாகவே பின்பற்றி வருகின்றனர்.
சமீப காலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இந்த வழிமுறையை ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் கடைபிடிக்கிறார்.
கேள்வி எழுப்பும் பத்திரிகையாளரை பார்த்து, அவர் சார்ந்த தொலைகாட்சி நிறுவனத்தைக் குறிப்பிட்டு, “உங்களுக்கு பதில் அளிக்க முடியாது” என்று வெளிப்படையாக கூறுவதுடன், அந்த பத்திரிகையாளரை மிரட்டும் வகையிலும், தரக்குறைவாகவும் தொடர்ந்து பேசிவருகிறார்.
பாஜக-வை சேர்ந்த மற்றொறு முக்கிய பொறுப்பாளரான எச்.ராஜா, ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களை, ஒரு குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புபடுத்தி உண்மைக்குப் புறம்பான, மிகவும் கீழ்த்தரமான அவதூறுகளை பரப்பிவருகிறார்.
பாஜக தலைவர்களின் இந்த அநாகரீக செயல் ஒரு தொடர் நடவடிக்கையாக மாறியுள்ள நிலையிலும், ஊடக நிறுவனங்களோ, பத்திரிகை ஆசியர்களின் சங்கமோ இதுகுறித்து எந்த நடவடிக்கையோ, எதிர்வினையோ எடுக்காமல் உள்ளது வருத்தத்தை அளிக்கிறது.
ஆகவே, பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையிலும், அவர்களை அவமானப்படுத்தும் வகையிலும் நடந்துகொள்ளும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எச் ராஜா போன்றோரை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தப்போக்கை அவர்கள் உடனடியாக கைவிடாவிட்டால் அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க ஆவண செய்வோம் என்றும் எச்சரிக்கிறோம்.
பத்திரிகை ஆசிரியர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பிவரும் இதுபோன்றோரை வன்மையாக கண்டிப்பதுடன், அவர் மீது தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

Related posts

“வேலை நீக்கம், சம்பளப் பிடித்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்பதில் உறுதியாய் இருப்போம். மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் ‘மே’ தின அறைகூவல்.

CMPC EDITOR

விகடனின் அக்கிரமத்திற்கு எதிராக அறச்சீற்றத்தை வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி! அநீதி இழைப்பது மட்டுமல்ல, அந்த அநீதியை கண்டு அமைதி காப்பதும் மக்களுக்கு செய்யும் துரோகமே!

CMPC EDITOR

தமிழ்நாடு ஊடக ஒளிப்பதிவாளர்கள் சங்கம், (TMCA) தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், மனப்பூர்வமான வாழ்த்துகளை தெறிவித்துகொள்கின்றது!

admin