- 2014 ஆண்டின் மத்திய பகுதியில், இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது நடத்திய தொடர் தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். இந்த நேரத்தில், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ், பாலஸ்தீனியர்கள் படும் துயரத்தை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்ட “5 Broken Cameras” என்ற ஆவணப்படத்தை, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தமிழில் மொழிபெயர்த்து திரையிட்டது. இந்த நிகழ்வு, 03.08.2014 அன்று சென்னை பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.