“2014 – மக்களவை தேர்தல் ஒரு பார்வை ” – புத்தக வெளியீட்டு விழா

0
785

• 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் முன் முயற்சியால் மூத்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய தேர்தல் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றவிதம், கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகள், வேட்பாளர்கள் தேர்வு, கருத்துக்கணிப்புகள் போன்ற பல்வேறு விஷயங்களை கண்காணித்து அது குறித்த கட்டுரைகளை எழுதி அவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட குழுவின் சார்பாக முடிவு வெடுக்கப்பட்டது. அந்த முடிவின் அடிப்படையில், “2014 – மக்களவை தேர்தல் ஒரு பார்வை ” என்ற புத்தகம் தயாரிக்கப்பட்டு, 07.06.2015 அன்று சென்னை, சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில், பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அரசியல் கட்சியின் நிர்வாகிகள் பதிலளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.