ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன் பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயகுமார் ஆகிய ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை எடுத்துள்ள முடிவை மாற்றதிற்கான ஊடகவியலாளர்கள் மையம் வரவேற்கின்றது

0
633

பிப்ரவரி 19 2014

தமிழக அரசின் இந்த நடவடிக்கை, ராஜீவ்காந்தி படுகொலையில் வெளிவராத பல உண்மைகள் குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருபவர்களுக்கும், மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்களுக்கும், சிறைத்துறை விதிமுறைகளில் சீர்திருத்தத்தை வேண்டுபவர்களுக்கும் பல்வறு தமிழ் இயக்கங்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் தருணமாகும். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தமிழக சிறைகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக விசாரணையின்றியும், பிணை வழங்கப்படாமலும், பத்து ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் சிறைவாசிகளையும் விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.