செப்டம்பர் 8 2014
பத்திரிக்கையாளர் சங்கங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் மட்டும் நான்கு பத்திரிக்கையாளர் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆணையர் அலுவலக வாசலில் நடைபெற்ற சம்பவத்தை கூட காவல்துறை அலட்சியமாக கையாளுகிறது. இதனை தடுக்க பத்திரிக்கையாளர்கள் நாம் ஒருங்கினைவது அவசியமாகிறது.
அனைத்து பத்திரிக்கை சங்கங்களும் ஒன்றுகூடி ஒரு கூட்டமைப்பை உருவாக்க மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அழைப்பு விடுக்கிறது. ஒருங்கினைந்த நமது முயற்சியே நமக்கு வெற்றியை தரும்.