“தோழர்” – வெறும் வார்த்தை அல்ல

0
1053
“தோழர்”
வெறும் வார்த்தை அல்ல.
அக்தோர் உணர்வு.
உரிமை பகிர, உரிமை மீட்க
பாலமாய் அமையும் ஓர் உறவு.
அது உணர்ச்சிக்கும் உணர்வுக்கும்
வித்தியாசம் கற்றுக்கொடுக்கும்.
பசிக்கும் ருசிக்குமிடையே
உள்ள அரசியலை புரியவைக்கும்.
காரணங்களையும் காரணிகளையும்
கண் முன் நிறுத்தும்.
எவருமிங்கு நண்பராகலாம்
காரணங்கள் போதும்.
தோழரென்றாவதற்கு தகுதி வேண்டும்,
ஆம் தகுதி வேண்டும்.
ஏன்?????
“தோழர்”
அது வெறும் வார்த்தை அல்ல.
அக்தோர் உணர்வு.
சமத்துவத்தையும் சமநீதியையும்
சாதித்துக்காட்ட ஆயுதமெடுக்க
தூண்டுமோர் உன்னத உணர்வு
“தோழர்” திவ்யன்