“தி இந்து” ஆசிரியர் சித்தார்த் வரதராஜனுக்கு பாராட்டு விழா

0
867
  • “தி இந்து” நாளிதழின் ஆசிரியராக பணியாற்றி வந்த சித்தார் வரதராஜன், அதுவரை எந்த பத்திரிகையும் செய்யத்துணியாத அல்லது வெளியிட விரும்பாத பல செய்திகளை மக்களின் பார்வைக்கு கொண்டு சேர்த்தார். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் நடைபெறும் சாதியக்கொடுமைகள், ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நடவடிக்கைகள், தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் விரிவாதிக்க எண்ணம், இலங்கை இனப்படுகொலை ஆதாரங்கள் போன்ற மக்களின் வாழ்நிலையை மாற்றக்கூடிய, மக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை “தி இந்து” நாளிதழில் வெளியிடச் செய்த பெருமை அவரையே சாரும். இந்நிலையில், ஹிந்து நிர்வாகம், திடீரென அவரை பதவியிறக்கம் செய்தது. இதன் காரணனமாக சித்தார்த் வரதராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். “தி இந்து” நாளிதழில் ஆசிரியராக பணியாற்றி காலத்தில் அவர் வெளியிட்ட செய்திகள் மற்றும் அவருடைய செயல்பாடுகளை பாரட்டும் வகையில் அவருக்கு பாராட்டு விழா நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 25.11.2013 அன்று, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பெஃபி (BEFI) அரங்கத்தில் சித்தார்த் வரதராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த நேரத்தில் சித்தார்த் இந்தியாவில் இல்லாத காரணத்தால் அவரால் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த நிகழ்வில், பேராசிரியர் அ.மார்க்ஸ், மூத்த பத்திரிகையாளர்கள் சத்யாசிவராமன், பீர்முகம்மது மற்றும் திரைப்பட இயக்குனர் நவீன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.