சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு ஒரு வேண்டுகோள்!

0
385

மார்ச் 4 2014

சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு ஒரு வேண்டுகோள்!

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 03.03.2014 அன்று நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. மனித உரிமை போராளியும், மூத்த வழக்கறிஞருமான சங்கரசுப்பு கலந்துகொண்ட அந்த சந்திப்பில், சமூக விரோதிகளை பத்திரிகையாளர் மன்றத்திற்குள் அனுமதித்து கேள்வி கேட்க வாய்ப்பளித்த பத்திரிகையாளர் மன்றத்தின் நடவடிக்கை பத்திரிகையாளர்களாகிய எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. சக பத்திரிகையாளர் ஒருவர் கொடுத்த புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியான கிஷோர் கே சாமியை செய்தியாளர் என்ற பெயரில், பத்திரிகையாளர் மன்றத்திற்குள் அனுமதித்தது பத்திரிகையாளர்களுக்கு எதிரானது.

பத்திரிகையாளர்களை சந்திக்க வருவதற்கு காரணமே தங்கள் தரப்பு பிரச்சனைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே. அதிலும் அவர்கள் பத்திரிகையாள்ர் மன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் பத்திரிகையாளர்களை எளிதில் அனுகிவிடலாம் என்பதால்தான். அதுபோன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகையாளர் மன்றத்திற்குள், சமூக விரோதிகளை அனுமதித்ததை எந்த உண்மையான பத்திரிகையாளர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த நடவடிக்கையை எதிர்ப்பது ஒவ்வொரு பத்திரிகையாளரின் கடமையும் கூட. அந்த வகையில் சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே எங்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் பதில் அந்த சமூக விரோதிகளை காப்பது போலவே அமைந்திருந்தது. இது பத்திரிகையாளர் மன்றத்தின் கண்ணியத்தை குறைக்கும் செயல். பத்திரிகையாளர்களின் கண்ணியத்தை குறைக்கும் எந்த செயலையும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் ஏற்றுக்கொள்ளாது. இந்த நடவடிக்கையை மேலும் தொடர்ந்தால் பத்திரிகையாளர் மன்றம் உண்மையான பத்திரிகையாளர்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால், இதுபோன்ற நடவடிக்கையை உடனடியாக திருத்திக்கொள்ளுமாறு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கின்றது.

பத்திரிகையாளர் மன்றம் என்பது பத்திரிகையாளர்களுக்கானதுதானே தவிர, பத்திரிகையாளர் என்ற பெயரில் இருக்கும் சமூக விரோதிகளுக்ககானது அல்ல. பாதிக்கப்பட்டவனின் கருத்தை கூறவிடமால், பாதிப்பை ஏற்படுத்தியவர்களே தடுப்பதும் கருத்துரிமைக்கு எதிரானதே. அந்த வகையில் இந்த நிகழ்வை கடுமையாக கண்டிக்கிறோம்