சென்னை ஆணையர் அலுவலகத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற தினத்தந்தி நிருபர் பெனிக்ஸ் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்!

0
497

ஆகஸ்ட் 29 2014

சென்னை ஆணையர் அலுவலகத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற தினத்தந்தி நிருபர் பெனிக்ஸ் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்!

நேற்று மாலை வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பான செய்தி சேகரிக்க ஆணையர் அலுவலகம் சென்றுள்ளார் பெனிக்ஸ். அப்போது சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து பெனிக்ஸின் இரு சக்கர் வாகனம் மீது மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெனிக்ஸ் காரை சரியாக ஓட்டுமாறு திட்டியுள்ளார். திடீரென காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் பெனிக்ஸை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளது.

 

பலத்த காயமடைந்த செய்தியாளர் பெனிக்ஸ், அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆணையர் அலுவலகத்தின் வாசலிலேயே அடிதடி சம்பவம் நடைபெற்றும் போலீசார் தடுக்காமல் இருந்தது கண்டனத்துக்கு உரியது.

மேலும் செய்தியாளர் பெனிக்ஸை தாக்கியவர்கள் வழக்கறிஞர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு  மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக் கொள்கின்றது.