கொடும் புலி…. – அன்சர்

0
802

அவள் கண்விழிக்கும்போதே மூன்று குழந்தைகளும் கண்விழித்துக் கொண்டன… விழித்த கொஞ்ச நேரத்தில் அவர்களுக்கு பசி எடுத்துவிடும்…. நேற்றும் போதிய உணவு உண்ண கிடைக்கவில்லை…. சிந்தனையோடு வீட்டைவிட்டு உணவு சம்பாதிக்கும் நோக்கில் பார்வையை படரவிட்டு புறப்பட்டு சென்றாள்……

இங்கே மிருகங்கள் வசிப்பிடப்போட்டியில்.. ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்தன. வலிமை வாய்ந்த கொடும்புலி ஒன்று… மற்ற மிருகங்களை விரட்டியடித்து… கர்வத்தோடு தன் சாம்ராஜ்யத்தை நோக்கி பார்வையை சுழலவிட்டது….

கோழை மிருகங்கள் கருவிக்கொண்டே வெளியேற…

வழக்கமாய் மனிதர்களுக்கு வைக்கும் பெயர் கொண்ட அந்த மிருகம், அசுர புத்தியால் உருவாக்கப்பட்ட உலோக ராட்சனை கொண்டு காட்டை, அதன் உரு மாற்றிக் கொண்டு இருக்க…

நெடுந்தொலைவு பயணித்தும் போதிய உணவு கிடைக்காத அவள் இருப்பதை தன் குஞ்சுகளுக்கு பகிர, அழிக்கப்பட்ட காட்டில் இறந்த காலமாகிவிட்ட தன் குடும்பத்திடம் திரும்பிக் கொண்டிருக்கிறாள்….