ஐரோப்பிய சாம்பியன்சிப்பின் இறுதி போட்டியில் போர்ச்சுக்கல் – தேவா

0
734

இந்த முறை போர்ச்சுக்கல் ஐரோப்பிய சாம்பியன்ஸிப் இறுதி போட்டிக்குள் நுழைவதற்கான பிரகாசமான வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு ஜாம்பவான் ஐரோப்பிய அணியையும் அது இறுதி போட்டிக்கு முன்பாக அது எதிர்கொள்ளும் வாய்ப்பு இல்லை. காலிறுதியில் போலாந்துடன் மோதுகிறது. எப்படியும் வேல்ஸை வீழ்த்தி பெல்ஜியம் அரையிறுதிக்கு எளிதாக நுழைந்துவிடும். போலாந்தும், பெல்ஜியமும் மட்டுமே இறுதிபோட்டிக்குள் போர்ச்சுக்கல் நுழைவதற்கான முட்டுக்கட்டைகள். இதில் போலந்தை விட பெல்ஜியம் வலுவான அணி. அத்தோட உலகின் இரண்டாம்நிலை அணிதான் என்றாலும் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற அணிகளோடு மோதுவதற்கு பெல்ஜியமே சற்று தேவலாம்தான்…

எப்படியிருந்தாலும் போர்ச்சுக்கல் இறுதிபோட்டியில் ஜெர்மனியோடுதான் மோத வேண்டியிருக்கும்.

இத்தாலிக்கும் ஸ்பெயினுக்குமான ரவுண்ட் 16ல் யார்ஜெயித்தாலும் காலிறுதியில் உலக சாம்பியன் ஜெர்மனியை எதிர்கொள்வது சற்று கடினம்தான். அதே நேரம் ஃபிரான்ஸும் இங்கிலாந்தும் காலிறுதியில் மோதுவதற்கான சாத்தியக்கூறுதான் தெரிகிறது. அதில் யார் வென்று வந்தாலும் அரையிறுதியோடு வெளியேற வேண்டிய வாய்ப்புதான் அதிகம். காரணம் ஜெர்மனியோ, ஸ்பெயினோ அல்லது இத்தாலியோதான் அவர்களோடு அரையிறுதியில் மோதப்போகிறார்கள்.

இந்த முறை கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளாக கருதப்பட்ட ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி ஆகியா மூன்று முன்னாள் ஜாம்பியன்களும் அரையிறுதிக்கு முன்பாகவே ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன. அவற்றில் இருந்து ஒரே அணிதான் அரையிறுதிக்கே வரும். அதுவும் ஜெர்மனியாக இருக்கும்பட்சத்தில் இங்கிலாந்தையோ அல்லது ஃபிரான்ஸையோதான் எதிர்கொள்ளக்கூடும் என்பதால் இறுதிப்போட்டிக்கு செல்வதில் சிக்கல் இருக்காது. ஒருபுறம் ஜாம்பவான்கள் அரையிறுதிக்கே கடும் சமர் நடத்தவேண்டியிருக்க இன்னொரு பக்கம் போர்ச்சுக்கல்லுக்கு அதன் கேப்டன் கிரிஸ்டியானோ ரொனால்டோவின் முயற்சி கைகூடினால் இறுதிபோட்டிவரை செல்ல பெரும் சிக்கல் இருக்காது.

அதேநேரம் உலகின் மிக வலுவான அணிகளில் ஒன்றும் கடந்த உலககோப்பையில் அரையிறுதிவரை யாராலும் அசைக்க முடியாத அணியான நெதர்லாந்த் ஐரோப்பிய சாம்பியன்ஸிப் போட்டிக்கே தகுதி பெறமுடியாமல் போனது போல் எதுவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.