“ஆதலால் காதல் செய்வீர்” – இயக்குனர் சுசீந்திரனுடன் உரையாடல்

0
756
  • தர்மபுரி இளவரசன் மரணத்தை தொடர்ந்து, சாதி உணர்வை தூண்டும் வகையில், காதலுக்கு எதிராக ஒரு சில கட்சியினரும், அமைப்பினரும் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளியான “ஆதலால் காதல் செய்வீர்” என்ற திரைப்படம், சாதிய சக்திகளின் விஷம பரப்புரைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் கருதினர். ஆகவே, இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனர் சுசீந்திரன், என்ன சொல்ல விரும்பியுள்ளார் என்பதை அவரிடம் விளக்கம் கேட்டறியும் வகையில், சுசீந்திரனுடன் ஒரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு 20.10.2013 அன்று, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பெஃபி (BEFI) அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் சுசீந்திரன், தான் காலுக்கு எதிரியல்ல என்பதையும், தன்னுடைய திரைப்படம், சாதிய அமைப்புகளால் முன்வைக்கப்படும் காலுக்கு எதிரான கருத்துக்கு ஆதராவானதல்ல என்பதையும் விளக்கினார்.