“அனைத்த பத்திரிகையாளர்கள் மற்றும் படைப்பாளிகள் முன்னணி” உருவாக்கம்

0
954
  • பத்திரிகையாளர்கள் அவர்கள் சார்ந்த பத்திரிகைகளில் எழுதும் கட்டுரைகள் மற்றும் வழங்கும் செய்திகளின் அடிப்படையில், அவர்களுக்கு எதிராக சமூக வளைதளங்களில் சிலர் தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டு வந்தனர். சில எழுத்தாளர்களும் இந்த நபர்களால் கேவலமாக விமர்சிக்கப்பட்டனர். குறிப்பாக, பெண் பத்திரிகையாளர்களை இவர்கள் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சித்தனர். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் உறுதுணையாக நின்றது. அத்துடன் நில்லாமல், பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை உள்ளடக்கிய “அனைத்த பத்திரிகையாளர்கள் மற்றும் படைப்பாளிகள் முன்னணி” என்ற அமைப்பு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் முன் முயற்சியால் உருவாக்கப்பட்டது. இந்த முன்னணியால் நடத்தப்பட்ட கண்டனக் கூட்டம் 29.09.13 அன்று, சென்னை பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், மூத்த பத்திரிகையாளர்கள் ”தீக்கதிர்” குமரேசன், ஜவஹர், கோவி.லெனின் ஆகியோர் கலந்து கொண்டனர்.